அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது.
ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக்க படைகள் 2003ஆம் ஆண்டு ஈராக் போர் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் சவூதி அரேபியாவில் கால்பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்க படைகள் #சவூதி அரேபியா #கால்பதிப்பு #வளைகுடா #ஈராக்