தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர்கள் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.
தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்தமைக்கு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
அதன்படி இன்று காலை முதல் மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான 1503 வாக்குகளில் ஆர்.கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகளைப் பெற்றார். #தமிழ் #திரைப்பட #இயக்குனர்கள் ,#தேர்தல் #ஆர்.கே. செல்வமணி #வெற்றி