ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க தயாராகவிருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ அடுத்த மாதம் இது தொடர்பான அறிவிப்பை விடுப்பாரென்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே, இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளாராக தான் இதுவரை பெயர் குறிப்பிடவில்லை என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க தயார்…
169
Spread the love