சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, ராணுவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த விடயங்களில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக ஈரான் உளவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் டிரம்ப் இவை அனைத்தும் பொய் எனத் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை; ரத்து செய்த டிரம்ப் ஈரான் மீதான தடையை மேலும் வலுப்படுத்தினார்.அத்துடன் ஈரானின அணு ஆயுத நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா வெளியேறியது.
அதன் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் இருநாடுகனிதும் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தன. இந்தநிலையிலேயே கடந்த ஓராண்டில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அமைப்புக்காக வேலை செய்த உளவாளிகள் 17 பேரை கைது செய்ததாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது
அமெரிக்கா உளவு பார்த்தமை குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது ஈரான் தொலைக்காட்சிய்ல் வெளியாகும் எனவும் ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #சி.ஐ.ஏ #உளவு #பணிபுரிந்த #கைது #மரண தண்டனை #ஈரான்