புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அருகே உள்ள புதுச்சேரி, மத்திய அரசின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசமாக காணப்படுகின்ற நிலையில் அதற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அங்குள்ள அரசியல் கட்சிகளால் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, புதுச்சேரி சட்டசபையில் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கக்கோரும் யோசனை எதுவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். #புதுச்சேரி #மாநிலஅந்தஸ்து #மத்திய அரசு #அறிவிப்பு