உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று காலை 10.30 மணியளவில் ஒன்று கூடியுள்ளது. இன்று தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஷானி அபேசேகர, பொலிஸ் தீவிரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி வருண ஜயசுந்தர மற்றும் அந்த பிரிவின் காவற்துறை பரிசோதகர் தரங்க பத்திரண ஆகியோர் முன்னிலையாகி உள்ளனர். இதன்போது சிலரது சாட்சி விசாரணைகளை ஊடகங்களுக்கு வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று ஒன்று கூடியுள்ளது..
157
Spread the love