161
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணமாகவே வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருகின்றன என்று கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன் கழிவு கொள்கலன்கள் தொடர்பான ஆய்வுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்து வருவதாகவும் இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ள வர்த்தமானியில் முழுமையான மற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். #வெளிநாட்டு #கழிவுகள் #மகிந்த #சுற்றிக்கை #வர்த்தமானி
Spread the love