நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை இதுவரையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை இதுவரையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் நிதி மற்றும் கணக்கியல் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த சுவர்ணதிலக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கிய அவர், 2019 ஆம் ஆண்டில் இதுவரையில் குறித்த வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்காக 182 மில்லியன் ரூபா அரசாங்கதத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கான அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணம் தொடர்பில் நேற்று விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்காகவும் ஊழியர்கள் 39 பேரின் சம்பளத்திற்காகவும் அரசாங்கத்தின் பணம் செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.