கடற்படையினரினால் இரணைதீவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினரினால் இரணதீவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட சில வெடிபொருட்களான 28 டெட்டனேட்டர்கள், 2 மீட்டர் நீள பாதுகாப்பு தோட்டாக்கள், 1 விஷம் போத்தல் உள்ளிட்ட பல் பொருட்களை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 26, 31 மற்றும் 37 வயதுடைய நச்சிகுடா, இரணைதீவு வீரவில் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் மீட்கப்பட்ட வெடிபொருட்களும் நாச்சிகுடா காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
கடல் சுற்றுச் சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும் வெடிபொருட்களுடன் மூவர் கைது ….
218
Spread the love