அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த 30 பேரே இன்று வெளியேற்றப்பட்டுள்ளள்ளனர். அண்மையில் இந்தியாவின் அசாம் பகுதிகளுக்குள் வெவ்வேறு நேரங்களில் நுழைந்த 30 பங்களாதேஷத்தினர் சரியான பயண ஆவணங்கள் இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் கைதாகினர் இவ்வாறு கைதானவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் அடங்குவதுடன், அவர்கள் மாநிலத்தின் பல்வேறு தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அத்துடன் அவர்கள் அனைவரும் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கரிம்கஞ்ச் எல்லை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு பங்களாதேஷ் எல்லைக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கமைய அசாமில் உள்ள பங்களாதேஷத்தினரை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசியப் பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.