அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோத்தாபய ராஜபக்ஸ கடந்து மே மாதமே பெற்றார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பான இறுதி ஆவணத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த மே மாதமே அனுப்பியது.
அந்தவகையில் எதிர்வரும் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும், அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், அவரது பெயரும் இடம்பெற உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் 31ஆம் திகதி வரை அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமை குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதாவது, கோத்தாபய ராஜபக்ஸ மே மாதமே இறுதி ஆவணத்தைப் பெற்று விட்டார். குறித்த இறுதி ஆவணத்தை பார்வையிட்ட சிலரில் தானும் ஒருவர் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.