132
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை, கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love