மட்டுவில் கிருஸ்ணா கலைத்தமிழ் அரங்கம் நடத்திய ஆடித்திருவிழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மட்டுவில் வடக்கு கமலாசனி வித்தியாலய சுப்பையா அரங்கில் நடைபெற்றது.
கலைத்தமிழ் அரங்கத்தின் உபதலைவர் க.பா.உ.சோகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். தென்மராட்சி கலாசார உத்தியோகத்தர் குலசிங்கம் ரஜீவன், மட்டுவில் கமலாசனி வித்தியாலய அதிபர் ஐ. தேவராஜன், சங்கானை சைவப்பிரகாச வித்தியாலய ஆசிரியர் செ. பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் சி. மதீசன் ஆடிமாதச் சிறப்புக்கள் குறித்து உரையாற்றினார்.
பட்டிமண்டபம், இசைக்கச்சேரி நடனம் உ;ள்ளிட்ட கலைநிகழ்வுகள் நடைபெற்றன. கிருஸ்ணா கலைத்தமிழ் அரங்கத்தின் தலைவரும் சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலைக் கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் கணேசலிங்கம் ரதீபன்; விருந்தினர்களைக் கௌரவித்தார். நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பவற்றைப் பரிமாறியிருந்தனர். #மட்டுவிலில் #ஆடித்திருவிழா