184
அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருதுடதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #யாழ்ப்பாணம் #விபத்தில் #பலி #காயம்
Spread the love