கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர்வரும் 6ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப்பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்;தும் முறையற்ற விதத்தில் அகழ்வது தொடர்பாக பிரதேச மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளைத்தெரிவித்திருந்
இந்நிலையிலும் மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில் இம்மாத முற்பகுதியில் பூநகரி காவல் நிலையம்முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்;ததையடுத்து, இரு தரப்புக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மைதொடர்பில் பூநகரிப்பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்;தநிலையில் குறித்த மணல் அகழ்விற்;கு இன்று வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது,
குறித்த வழக்கு இன்றைய தினம் (29-07-2019) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம்; பிருந்தா, கோகுலதீபன் தர்சா, ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்தமன்று எதிர்வரும் 6ம்திகதி வரையும் மணல் அகழ்விற்கான தடையினை நீடித்துள்ளது. #கௌதாரிமுனை #மணல் அகழ்வதற்கான #தடை #நீடிப்பு