55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இரு நாடுகளுமிடையே பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான டேவிஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.
பதற்றம் காரணமாக இந்திய அணி அங்கு சென்று விளையாடுமா என கேள்வி எழுந்திருந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 14, 15 திகதிகளில் இஸ்லாமாபாதில் நடைபெறும் டேவிஸ் கிண்ண போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய டென்னிஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக கடந்த 1964 இல் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண போட்டியில் இந்தியா 4-0 என்ற செட் கணக்கில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. #இந்திய அணி #பாகிஸ்தான் #டென்னிஸ் #டேவிஸ் கிண்ண #davis-cup