இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரத்வி ஷா ஊக்கமருந்து பாவித்தமை உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு 8 மாத காலம் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த பெப்ரவரி மாதம் சையத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்கே இவ்வாறு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு சதம் உட்பட 237 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரத்வி ஷா #தடை #ஊக்கமருந்து