மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்ட போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
15 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று, மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைது செய்யப்பட்டதுடன் எக்ஸ்டசி வகையைச் சேர்ந்த 3050 போதைவில்லைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போர்த்துக்கல்லிருந்து குறித்த பொதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதான சந்கேநபரின் உதவியாளர் என்பதுடன், போதைவில்லைகள் அடங்கிய பொதியைப் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்; கொழும்பைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் எனவும் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #போதைவில்லை #சந்தேகநபர் #அடையாளம்,