அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் ஹம்ஸா பின்லேடனின் மரணம் தொடர்பிலான விரிவான தகவல்கள் இதுவரை அமெரிக்காவால் வெளியிடப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
30 வயதான ஹம்ஸா பின்லேடன் தொடர்பில் தகவல்கள் வழங்குவோருக்கு 1 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என, அமெரிக்க அரசாங்கத்தால் கடந்த பெப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக, ஹம்ஸா பின்லேடன் குரல் பதிவுகளையும் காணொளிகளையும் வெளியிட்டிருந்தார்.
2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின்போது ஆப்கானிஸ்தானில் அவர் தங்கியிருந்ததாகவும் பின்னர் அமெரிக்கா தலைமையிலான தேடுதலின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஒசாமா #மகன் #உயிரிழந்துள்ளதாக #ஹம்ஸா பின்லேடன் #அமெரிக்க