200
ஐ.எஸ் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை தொடர்பில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #ஐ.எஸ் #பயங்கரவாதத்தினை #வெளிநாட்டு #புலனாய்வு #உதவி
Spread the love