ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் காணப்படும் பொது வேட்பாளரான தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சமரசத் திட்டத்துக்குச் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா அல்லது கரு ஜயசூரியவா என்னும் சர்சையை முடிவுக்குக் கொண்டுவரும் இணக்க ஏற்பாடாக கரு ஜயசூரியவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கும் பட்சத்தில் நாட்டின் பிரதமருக்கே அதிக அதிகாரங்கள் காணப்படும் என்னும் சூழலில் பிரதமராகப் பதவியில் இருப்பது நாட்டின் அரச தலைவர் பதவிக்கு ஒப்பானது என்தனை கவனத்தில் கொண்டே ரணில் விக்கிரசிங்க இதற்கு ஆதரவளித்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #ஜனாதிபதி #வேட்பாளராக #ஐக்கிய தேசியக் கட்சி #கருஜயசூரிய #ரணில் விக்கிரமசிங்க