வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக காவற்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைக்கபட்டுள்ள காவற்துறை சோதனை சாவடியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட காவற்துறை அத்தியட்சகரிடம் ஒருங்கினைப்பு குழுவால் விளக்கம் கோரப்பட்டது. குறித்த சோதனை சாவடியை விரைவாக அகற்றுவது தொடர்பாக நடவடிக்கையினை எடுப்பதாக காவற்துறை அத்தியட்சகர் ஒருங்கினைப்பு குழுவிற்கு தெரிவித்திருந்தார்.
வவுனியா பேருந்து நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை…
158
Spread the love