இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது
ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டொம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரொபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்து உள்ளனர்.
கபில்தேவ், கெய்க்வாட் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது. 13 அல்லது 14ஆம் திகதி நேர்காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது