லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகள் 75 பேர் நடுக்கடலில் வைத்து கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு நடைபெறும் உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதயைடுத்து லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்ற 75 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.லிபியாவின் ஜூவ்வாரா நகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கில் படகுகளில் சென்ற 75 அகதிகள் உள்நாட்டு கடற்படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழு அதிகாரி ஒருவர் தெரிவ்pததுள்ளார்.
கடந்த மாதம் லிபியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் நோக்கில் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #லிபியா #நடுக்கடலில் #அகதிகள் #மீட்பு