யாழ்ப்பாணம் – வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களி
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைச் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்திவரை செல்லும் வீதியில் உள்ள வழுக்கையாற்றுப் பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக வழிப்பறிக்கொள்ளைகள் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தபோதும், இழந்த நகைகளையோ, பணத்தையோ? காவல்துறையினர் மீட்டுக்கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அத்துடன் குறித்த வீதியில் கொள்ளையர்கள் உலாவுகின்றனர். மக்கள் அந்த வீதியால் செல்வதற்கு அஞ்சுகின்றனர் என்று தெரிவிக்கப்படும்போது, அந்த வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலோ, அல்லது மக்களுக்கான பாதுகாப்பிலோ காவல்துறையினர் ஈடுபடுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.
கொள்ளையர்கள் நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் பயணித்த பெண்ணை துரத்திச் சென்று அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அறுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண்ணின் கழுத்துப் பகுதி காயங்களுக்கு உள்ளானது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மேலங்கி, கையுறை, முகத்தை மூடிய தலைக்கவசம் என்பவற்றை அணிந்திருந்திருந்தனர். அந்த வீதியால் அங்கும் இங்கும் செல்கின்றனர். தனிமையில், உதவியின்றி வருபவர்களை அவதானித்து அவர்கள் தங்களுடைய கைவரிசைக் காட்ட முற்படுகின்றனர். இதனால் நவாலி வீதியால் பயணிப்பதற்கு அச்சம் ஏற்படுகிறது. நவாலி வீதியில் இடம்பெறும் இந்தச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காதுவிடின் காலப்போக்கில் உயிராபத்துக்களும் ஏற்படக்கூடும் – என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். #யாழ் #வழுக்கையாற்று #வழிப்பறிக்கொள்ளையர்களின் #அட்டகாசம் #பணம் #நகை
-மயூரப்பிரியன்