வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அரபு நாடு ஒன்றுக்கு சொந்தமான எரிபொருளை கடத்தி சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றினையே பாரசீக வளைகுடா பகுதியில் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணெய் கப்பலில் ஏழு லட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாகவும், அதில் இருந்த ஏழு மாலுமிகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்த எரிபொருள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிடிபட்ட இக்கப்பலில் எந்தக் கொடி இருந்தது, மாலுமிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இன்னும் தெரிய வரவில்லை. # வெளிநாட்டு #எண்ணெய் கப்பலை #ஈரான் #அரபு நாடு