ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்புப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலமான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக்கிரியைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்னர் அண்மையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரியும் மகிந்தவும் சந்தித்தனர்…
120
Spread the love