காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ஐ.நா. அறிவுறுத்தல் விடுத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு குறித்து அவரது செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் செய்தியாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கவலையுடன் பார்த்து வருகிறார் எனவும் அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார் எனவும் தெரிவித்த செய்தித்தொடர்பாளர இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால்தான் ஐ.நா. பொதுச்செயலாளர் சமரசம் செய்து வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார். #பொறுமை #இந்தியா #பாகிஸ்தான் #அறிவுறுத்தல் #ஐ.நா