அமெரிக்காவில் காடுகளில் வாழும் அபாயகரமான ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை சயனைட் வெடிகளைப் பயன்படுத்தி கொல்லும் தற்போதைய நடைமுறையை தொடர அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அரசு காட்டு விலங்குகளுக்கு எதிராக முடிவெடுக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவ்வாறு கொல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட விலங்குகள் பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடிக்கப்பட்டு வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு கொல்லப்படவுள்ளன. இதேவேளை இவ்வாறு விலங்குகளை கொல்வதற்காக வைக்கப்படும் பொறிகளில் சில சமயங்களில் குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக 2017ஆம் ஆண்டு விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறி ஒன்றில்; சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்றுக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அமெரிக்க அரசு குழந்தையின் பெற்றோருக்கு 1,50,000 டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #அமெரிக்கா #காட்டுவிலங்குகளை #சயனைட் #கொல்ல #ஒப்புதல்#ஓநாய்கள் #நரிகள்