இந்தியஅரசின் நிதிப்பங்களிப்பின் கீழ் அமைக்கப்பட்டசெந்தமிழ் மாதிரிக் கிராமத்தினைபயனாளிகளுக்குகையளித்தல்.
இந்திய அரசின் நிதிப்பங்களிப்பில் வீடமைப்பு கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சினால் மாதிரிக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்குபிரதேசத்தில் அமைக்கப்பட்ட செந்தமிழ் மாதிரிக் கிராம வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (10 ஆகஸ்ட் 2019) இடம் பெற்றது. இந்தியஅரசின் நிதிப்பங்களிப்பின் கீழ் அமைக்கப்படும் 100 மாதிரிக் கிராமங்களில் இது 3வது மாதிரிக் கிராமமாகும்.
வீடமைப்பு கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் ஆகியோர் இணைந்து இம் மாதிரிக் கிராமத்தினைத் திறந்துவைத்ததுடன் வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவைசேனாதிராசா மற்றும் சரவணபவன், வடமாகாணத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரச அலுவலர்கள ;பயனாளிகள ;மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்திய அரசாங்கமானது 1200 மில்லியன் இலங்ஐ கரூபாய் நிதிப்பங்களிப்பில் நாடு முழுவதும் 2400 வீடுகளை உள்ளடக்கி 100 மாதிரிக் கிராமங்களை வீடமைப்புகட்டுமானம் மற்றும் கலாச்சாரவிவகாரங்கள் அமைச்சுடன் இணைந்து நிர்மாணித்துவருகின்றது. இவ் 2400 வீடுகளுக்கு மேலதிகமாக ஏற்கனவே இந்தியவீட்டுத் திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் அமைக்கப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட வடக்குமற்றும் கிழக்குமக்களுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்தியா ஆனது சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, திறன் அபிவிருத்தி, உட்கட்டுமானம், தொழில்சார் பயிற்சி நடவடிக்கை உட்பட்ட பல்வேறு துறைகளில் 70ற்கும்; மேற்பட்டமக்கள் நலன் சார் அபிவிருத்தி செயற்திட்டங்களை இலங்கை முழுவதும் மேற்க்கொண்டு வருகின்றது. வடமாகாணத்திற்க்கென 27 பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் அமைத்தல், 3000 மழைநீர் சேகரிப்பு தொகுதிகளை அமைத்தல், திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்புமற்றும் யாழ்ப்பாணகலாச்சாரமையம் அமைத்தல் என்ற நான்கு பிரதான அபிவிருத்திதிட்டங்கள் உட்பட 20 செயற்திட்டங்கள் தற்போது இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கதினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 3பில்லியன் அமெரிக்கடொலர் நிதியில் உதவியாக வழங்கப்பட்டுள்ள 560 மில்லியன் அமெரிக்கடொலர் நிதியின் கீழே மேற்குறித்த அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியத் துணைத் தூதரகம்
யாழ்ப்பாணம்
ஊடகஅறிக்கை