சிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கெதிராக அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றனஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் படைவீரர்கள் மற்றும் போராளிகள் என 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவில் உள்ள பிரித்தானியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.