(க.கிஷாந்தன்)
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே விடுவிக்க கோரி ஹற்றன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்து நாடு கடத்த உள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அதனை தடுக்க வேண்டும் என்றால் உலகலாவிய ரீதியில் பரந்து வாழும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். சர்வதேச வல்லரசு நாடுகள் மேற்கொள்ளும் அட்டுலியங்களுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதனையும் பேச்சு சுதந்திரத்தனையும் எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும். எனவே இவ்வாறான செயல்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கவனயீர்ப்பு போராட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை சோசலீச சமத்துவ கட்சி ஒழுங்கு செய்திருந்ததுடன் போராட்டத்தினை தொடர்ந்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்றது.