கனடாவில் இடம்பெற்றுவந்த றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், இரண்டாம்நிலை வீரரான ரபேல் நடால் மற்றும் கனடாவின் பியன்கா அன்ட்றீஸ் ஆகியோர் சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ரஸ்ய வீரரான டானியல் மெட்வடேவ்வை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான நடால், 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அதேவேளை மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பியன்கா அன்ட்றீசை எதிர்கொண்ட அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலாவது செட்டில் 3-1 என முன்னிலை வகித்திருந்தபோது உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகிய நிலையில் பியன்கா அன்ட்றீசு சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #றோஜர்ஸ்கிண்ண #டென்னிஸ் #நடால் #பியன்கா,