163
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை பெய்து வருவதனால் அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2.26 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் இன்று புதன்கிழமை விடுத்துள்ளது.
Spread the love