மயூரப்பிரியன்..
செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.
செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவில்….
செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதான சுடரினை செஞ்சோலை படுகொலையில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தை ஏற்றிவைத்ததுடன் பிள்ளைகளின் உருவப் படங்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டது. இதேவேளை, குறித்த நினைவுத் தூபி அமைக்கும் வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த இடத்தில் ஒளிப்படங்களைப் பதிக்கவோ, அவர்களுடைய பெயர்களை எழுதவோ தடை விதித்தனர்.
இந்நிலையில் நினைவுத் தூபியில் நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களைப் பதிக்க முடியாவிட்டாலும் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு செஞ்சோலை வளாக வீதி என எழுதப்பட்ட குறித்த வளைவு திறந்துவைக்கப்பட்டது.