திருப்பதியில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த,பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்ய விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் வாராந்திர ஆலோசனை கூட்டத்தின் பொது தலைமை தாங்கிப் பெசிய தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்
6 மலைகளை கடந்து 7-வது மலையில் எழுந்தருளியிருக்கும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததனால் திருமலை மாசுபடுவதுடன், சேஷாசலம் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் ஏழுமைலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில், கடைகள் நடத்தும் வியாபாரிகள், உள்ளூர் மக்கள் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீர் விற்பனை செய்வது கூட இனி இருக்காது. அதற்காக திருமலை முழுவதும் பல்வேறு இடங்களில் தேவஸ்தான ஜலப்பிரதசானி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். அதில் பக்தர்கள் குடிநீர் குடிக்கலாம். அங்கு குடிநீரை வீணாக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். #திருப்பதி #பிளாஸ்டிக் #குடிநீர் #தடை