முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காணிப்பு பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை மகிந்த களமிறக்கியதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தாபயவின் பிரவேசம் நாட்டை பேரழிவிற்கு இட்டுச்செலும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு திடீர் என அவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.