170
தலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடற்டையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1.05 கிலோ கிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் பொதியினையே கடற்படையினர் இவ்வாறு மீட்டுள்ளனர்.
வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரியின் சிறப்பு சோதனையின் போது மீட்கப்பட்ட குறித்த போதைப்பொருள் தலைமன்னார் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #தலைமன்னார் #ஐஸ் #போதைப்பொருள் #மீட்பு
-லம்பேர்ட்
Spread the love