திருப்பதி கோவிலில் பல ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் மாற்றப்படாததால், தேவஸ்தானத்திடம் மட்டும் 14 கோடி ரூபாமதிப்புள்ள சில்லறை நாணயங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது
திருப்பதி ஏழுமலையானை தரிசித்து செல்லும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். இதில் தினசரி உண்டியலில் இருந்து சேகரிக்கப்படும் ரூபாய் தாள்கள் மட்டும் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு மூலமாக எண்ணப்படுகிறது.
அதேசமயம், சில்லறை நாணயங்கள் மொத்தமாக மூட்டைகளாகக் கட்டப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு கொண்டு சென்று அங்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை சில்லறை நாணயங்களை ஏற்று வந்த வங்கிகள் அவற்றை கொண்டு செல்லவும், நிலுவையில் வைக்கவும் போதிய இடமில்லை என்று கூறி சில்லறை நாணயங்களை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்தன.
இதன் காரணமாக, பல ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் மாற்றப்படாததால், தேவஸ்தானத்திடம் மட்டும் 14 கோடி ரூபா மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் தேங்கியுள்ளன.
இந்நிலையில் அண்மையில் தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ள தர்மாரெட்டி, சில்லறை நாணயங்களை எந்த வங்கி ஏற்றுக் கொள்கிறதோ? அதே அளவிற்கு அந்த வங்கியில் தேவஸ்தானம் சார்பில் பணம் முதலீடு செய்யும் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவஸ்தானத்தின் இருப்பில் உள்ள சில்லறை நாணயங்களை பெற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #திருப்பதி #நாணயங்கள் #தேக்கம் #வங்கி #போட்டி