ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் திகதி குறித்து முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், கபீர் ஹாசீம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஐக்கிய தேசிய முன்னணி #புதியகூட்டணி #கலந்துரையாடல் #ஆரம்பம்