யுத்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன.
தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவேந்திர டி சில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.
யுத்த குற்றச்சாட்டுகளுள்ளான அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர டி சில்வாவை இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. #இலங்கை #இராணுவதளபதி #சவேந்திர டி சில்வா