நெல்லியடிக் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் கஞ்சாவை போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நெல்லியடி – துன்னாலை வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. ‘அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர், கப் ரக வாகனத்தைத் துரத்திச் சென்றனர். எனினும் அதில் பயணித்தவர்கள் கஞ்சா பொதிகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மீட்கப்பட்ட 65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நெல்லியடிக் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கப் ரக வாகனம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை தேடி சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #கஞ்சா #கடத்தியவர்கள் #தப்பியோட்டம் #நெல்லியடி
-மயூரப்பிரியன்