162
அம்பாறை – உஹன பகுதியில் இடம்பெற்ற பரசூட் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலத்திலிருந்து 7 000 அடி உயரத்தில் பரஷூட் பயிற்சி பெற்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவ விசேட செயலணியின் இரண்டாம் நிலை நிறைவேற்று அதிகாரி தரத்திலுள்ள உறுப்பினரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார். 44 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Spread the love