157
கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் நோக்குடன் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ, நைனாமடம் பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலினையடுத்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்;
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #அவுஸ்திரேலியா #தங்கியிருந்த #கைது
Spread the love