189
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் இன்று கூடவுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சொன்றின் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது
இன்று பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் என்.கே.இளங்ககோன் மற்றும் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #தெரிவுக்குழு #மூவர் #முன்னிலை
Spread the love