இத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச் சென்றமைக்காக சுற்றுலாப்பயணிகள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஒஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளமையினால் அங்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் செல்கின்றனர்.
இந்தநிலையில் இவ்வாறு அங்கு சென்ற 2 சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்போது போத்தல்களில் கடற்கரை மணலை, வந்து சென்றதன் நினைவாக எடுத்துச் செல்ல சுமார் 40 கிலோ மண்ணை நிரப்பியுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கடந்த 2017ம் ஆண்டு கடற்கரைகளை சுற்றுலா பயணிகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும், அங்குள்ள அரியப் பொருட்களை சேதப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்ததனையடுத்து அங்குள்ள கடற்கரைகளில் மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் சார்டினியன் கடற்கரையில் மணல் எடுத்ததற்காக கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள் இருவருக்கும் ஓராண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #கடற்கரைமணலை #நினைவாக #சுற்றுலாப்பயணிகளுக்கு #சிறை #இத்தாலி