வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இனிவரும் சிறப்பு உற்சவங்களுக்கு அதிகளவு அடியவர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த காவற்துறை யின் நடமாடும் சிசிரிவி கண்காணிப்புப் பிரிவு கொழும்பு காவற்துறை தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பிரிவு கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்களுடன் நல்லூர் ஆலயத்தை சென்றடைந்துள்ளது என யாழ்ப்பாணம் காவற்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும். நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர்.
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொலிஸ் நடமாடும் சிசிரிவி கண்காணிப்புப் பிரிவு கொழும்பு காவற்துறை தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.
மயூரப்பிரியன்..