137
ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது.
ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து இதன்போது ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஏற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
Spread the love