ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 22ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது இனிங்சில் 179 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து தனது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 112 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 359 என்ற வெற்றி இலக்குடன் 2வது இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் 73 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பென் ஸ்டோக்சின்; சிறப’பான துடுப்பாட்டத்தினால் 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 219 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 135 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது #ஆஷஸ் #டெஸ்ட் #இங்கிலாந்து #வெற்றி