194
ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்கும் மல்லோர்கா தீவில் ஹெலிகொப்டரும் சிறிய ரக விமானம் ஒன்றும் நடுவானில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தீவில் உள்ள இன்கா பகுதியில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது ஹெலிகொப்டரில் பயணம் செய்த மூன்று பேரும், இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஸ்பெயின் #ஹெலிகொப்டர் #விமானம் #விபத்து
Spread the love